தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா.
இவருக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது.
திருமணத்தேதிக்காக அனைவருக்கும் காத்திருந்த நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து திருமணம் ரத்தானதாக கூறப்படுகிறது.
இதனால் த்ரிஷாவுக்கு மீண்டும் படவாய்ப்புகள் குவிகின்றதாம்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் போகி படத்திலும், செல்வராகவன் இயக்கும் படத்தில் சிம்புக்கு ஜோடியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். கமல் ஜோடியாக நடிக்கவும் தேர்வாகியுள்ளார்.
மேலும் நடித்து முடித்துள்ள பூலோகம், அப்பாடக்கர் படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
0 comments:
Post a Comment