சமீபத்தில் உலகை உலுக்கிய சம்பவம் நேபாள நிலநடுக்கம். இன்றும் அவ்வப்போது தொடர்ந்து நிலநடுக்கம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவும், உடையும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
உலகநாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில் இளையதளபதி விஜய்யின் ரசிகர்கள் இதுவரை உள்ளூர் மக்களுக்கு உதவியுள்ளனர். தற்போது நேபாள மக்களுக்காக தங்களால் முடிந்த அளவு உடைகளை நேபாளத்துக்கு அனுப்பியுள்ளனர்.
நடிகர்களே இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாத நேரத்தில் ரசிகர்களின் இந்த செயல் நிச்சயம் பாராட்டத்தக்கது.
0 comments:
Post a Comment