தமிழ் சினிமாவின் ஜாம்பவனாக திகழ்ந்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி.
இவர்கள் இருவருடனும் பல படங்களில் நடித்தவர் நடிகை சரோஜா தேவி.
இவர் நேற்று நடைபெற்ற நாகிரெட்டி நினைவு திரைப்பட விருதுவிழாவில் பங்கேற்றார். இவ்விழாவில் மெட்ராஸ் படம் கடந்த ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை பெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பருமான கற்பக வினாயகம் பேசும்போது, நான் சரோஜாதேவியின் ரசிகன் என்றும் அவர் நின்றால், நடந்தால் என எது செய்தாலும் அழகு எனவும் வர்ணித்தார்.
இந்நிகழ்வில் 'மெட்ராஸ்' படக்குழுவைச் சேர்ந்த நடிகர் கலையரசன், நடிகை ரித்விகா, கலை இயக்குநர் ராமலிங்கம் ஒளிப்பதிவாளர் முரளி, எடிட்டர் பிரவீன் ஆகியோரும் கௌரவிக்கப் பட்டனர்.
0 comments:
Post a Comment