சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் படம் ‘வாலு’. கடந்த 2 வருடத்துக்கும்மேலாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. விஜயசந்தர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடித்தபோதே ‘இது நம்ம ஆளு’ படத்திலும் சிம்பு நடித்து வந்தார்.
இரண்டு படங்களும் தயாராகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இவற்றில் எந்த படம் முதலில் வெளியாகும் என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நிலவிவருகிறது. முற்றிலும் படப்பிடிப்பு முடிந்து இது நம்ம ஆளு படம் ரிலீஸ் ஆகாமலிருப்பதற்கு அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தனது வருத்தத்தை வெளிப்படையாக இணைய தளத்தில் வெளியிட்டிருந்தார். அதேபோல் வாலு படத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி பிறகு மாற்றி வைக்கப்பட்டது.தற்போது இம்மாதம் 9ம் தேதி ‘வாலு’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் பட ரிலீஸ் தொடர்பாக சில பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட வேண்டி உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. உத்தம வில்லன் படமும் மே 1ம் தேதி வெளியாகும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஒரு நாள் தாமதமாக வெளியானது. அதுபோல் பிரச்னை வாலு படத்துக்கும் வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும் 9ம்தேதி படம் கண்டிப்பாக வெளிவரும் என்று சிம்பு தரப்பு தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment