தோல்வியில் யாரும் பக்க பலமாக நிற்க மாட்டார்கள் : ஸ்ருதி வருத்தம்



படம் தோல்வி அடைந்தால் யாரும் பக்கபலமாக இருக்க மாட்டார்கள் என்றார் ஸ்ருதிஹாசன். அவர் கூறியதாவது:ஸ்டார் நட்சத்திரம் என்பதில் பெருமை இருந்தாலும் அவர்களைப்போல் நடிப்பது இயலாத காரியம். கமல், சரிகா இருவரின் நடிப்புடன் எனது நடிப்பை ஒப்பிடக்கூடாது. தந்தை மகளாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவரவர்களுக்கென்று தனிப்பட்ட பாணி இருக்கிறது. 

ஆனால் அதை மறந்துவிட்டு எப்போதும் அவரது மகளாயிற்றே என்று ஒப்பிடுவது சோர்வை தருகிறது. நடிக்க வந்த புதிதில் அது மிக கடினமான விஷயமாகவே இருந்தது. என்னைப் பார்ப்பவர்கள் நேரடியாக வந்து பேச ஆரம்பித்து விடுவார்கள். தோல்வி அடைந்துவிட்டால் யாரும் பக்கபலமாக நிற்க மாட்டார்கள். சொந்தமாகத்தான் போராடியாக வேண்டும். இந்தியில் கப்பர் ஈஸ் பேக் (ரமணா ரீமேக்) திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தின் கருவும், கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதமும் முற்றிலும் வித்தியாசமானது.
இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose