இயக்குனர் செல்வராகவன் சிறிது காலமாக படம் இயக்கவில்லை. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் “இரண்டாம் உலகம்”. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படம் ஒரு காதல் கதையை மையமாக வைத்து அருமையாக எடுக்கப்பட்டது. காதலை பல்வேறு உலகங்களில் காட்டி படத்தின் காட்சிகளைச் சிறப்பாக அமைத்திருந்தார். இப்படம் இவருக்கு மிகுந்த வெற்றியை தேடித் தரும் என எதிர் பார்த்த நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையவில்லை. இதனால்தான் என்னவோ அவர் சிறிது காலம் படம் இயக்கவில்லை.
தற்போது அவர் மனைவி இயக்கும் படம் “மாலை நேரத்து மயக்கம்”. இப்படத்தை இவர் இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் அவர் மனைவி இயக்க, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை இவர் பார்த்துக்கொண்டார். தற்போது செல்வராகவன் இயக்கவிருக்கும் படத்தில் திரிசா மற்றும் சிம்பு நடிக்கின்றனர். இதற்கான போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது. இது அருமையாக அமைந்தது என சிம்பு கூறியுள்ளார். சிம்புவின் படங்கள் இன்றளவில் கிடப்பில் கிடக்கும் நிலையில் அடுத்த படத்திற்கான வாய்ப்புகள் இன்றும் அவரின் கையில் கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றன
0 comments:
Post a Comment