காலைல 4 மணியில இருந்தே தலைவரை பார்க்க காத்திட்டு இருக்கேன் என்று புல்லரிக்க பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தனர். இதோ அதோ என்றனர் ஆனாலும் படம் ரிலீஸ் ஆன பாடில்லை. ஒருவழியாக நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி தாணு, இன்ன பிறர் தலைமையில் பஞ்சாயத்து நடைபெற்றது. ஊடகங்களில் எல்லாம் ஒரே உத்தமவில்லன் பேச்சுதான். இதோ படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிவிட்டது. இதற்கு ட்விட்டரில் ரசிகர்கள் நன்றி கூறியுள்ளனர்.
தொடர்ந்து 24 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்ட சரத்குமாருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

நிகில் முருகன் நன்றி பட ரிலீஸ் பிரச்சினையில் சோர்வடையாமல் தங்களுக்கு ஆதரவாக நின்ற ஸ்டூடியோ கிரீன் நிறுவனர் ஞானவேல் ராஜாவிற்கு ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார் நிகில் முருகன். பட ரிலீஸ் தாமதத்திற்கு அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

கமல் வந்தார் கிக் ஸ்டார்ட் படம் ரிலீஸ் ஆனதையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். கமல் வந்த உடன் உத்தமவில்லன் கிக் ஸ்டார்ட் ஆகியுள்ளதாகவும் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment