சில நாட்களுக்கு முன் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், ஐதராபாத்தில் தன் காரில் சென்று கொண்டிருந்த தெலுங்கு நடிகையான அஸ்மிதா கர்னானியை தன் கைகளால் ஆபாச சைகை காட்டி கொண்டே பின் தொடர்ந்தனர். அஸ்மிதாவின் காரையும் மறைத்து அவருக்கு தொல்லை தந்துள்ளனர் அந்த இரண்டு இளைஞர்களும்.
இதனை கண்டு சற்றும் பதட்டபடாமல் அஸ்மிதா அவரது மொபைலில் அவர்கள் இருவரையும் அந்த வண்டியையும், வண்டியின் நம்பரையும் புகைப்படம் எடுத்தார். இப்படங்களை தன் பேஸ்புக் வலைதளத்தில் பகிர்ந்து இதனை அனைவரும் பகிர கூறியிருந்தார். இதனை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்தனர். மேலும் இப்படங்களை போக்குவரத்து போலீசார் இணையதள பக்கத்திற்கும் பகிர இந்த விசயத்தை தெரிந்து கொண்ட போக்குவரத்துத் துறை போலீசார் அந்த இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அருமையாக செயல்பட்டுள்ளார் அஸ்மிதா. இதனால் அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றது.
0 comments:
Post a Comment