கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “உத்தமவில்லன்”. இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி நேற்று (மே 1) ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தியேட்டர்களில் முன்பதிவும் செய்யப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் உத்தம வில்லன் வெளியிடப்படவில்லை. இதனால் கமலின் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் படம் எல்லா பிரச்சனைகளை தாண்டி நேற்று (மே 2 ஆம் தேதி) திரைக்கு வந்தது.
இப்படமானது 2 மணி நேரம் 53 விநாடிகளாக எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது படம் மிகவும் நீளமாக இருப்பதால் படத்தின் காட்சிகளில் 15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் தற்போது 15 நிமிடம் படத்தை குறைப்பதால் படத்தின் காட்சியின் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது. இப்படத்தில் கமலுடன் இணைந்து ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர். மேலும் கே. பாலச்சந்தரும், விஸ்வநாத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
0 comments:
Post a Comment