சூர்யாவின் மாஸ் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ப்ரணிதாவுக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அஞ்சான், பூஜை படத்தையடுத்து பேர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் வெளியாகவில்லை. அதனால் மீண்டும் மார்க்கெட்டிற்கு வரவேண்டும் என்பதற்காக மாஸ் படத்தில் அதிரடியான டியூன்களை போட்டு வருகிறார். அனைத்து பாடல்களையும் முடித்த பிறகு சூர்யாவிடம் போட்டு காட்டியுள்ளார்.
பாடல்களை கேட்ட யுவனை பாராட்டி தள்ளி விட்டாராம். மாஸ் பாடல்கள் அனைத்து மரண மாஸாக இருக்கிறது என்று யுவனுக்கு, சூர்யா எனர்ஜி கொடுத்துள்ளார். அந்த தெம்பில் மாஸ் பட பின்னணி இசை சேர்க்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறாராம்.
0 comments:
Post a Comment