அஞ்சான்' படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து சமந்தா நடித்து வரும் '24' திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'மனம்' இயக்குனர் விக்ரம் குமாரின் இயக்கத்தில் வித்தியாசமான ஆக்சன் கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் கிரண் தியோஹன்ஸ் ஒளிப்பதிவும், ப்ரவீன் பூடி எடிட்டிங்கும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் மச்சக்காரன், வேலாயுதம், போன்ற படங்களில் நடித்திருந்தாலும் '24' படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிப்பதால் இந்த படம் அஜய்க்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி தரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அஜய் சமீபத்தில் வெளியான 'திக்குலு சூக்குடு ராமயா' (Dikkulu Choodaku Ramayya) என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வித்தியாசமான கதையம்சத்துடன் இருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment