ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ரோமியோ ஜுலியட். டி.இமான் இசையில் ரோகேஷின் பாடல் வரிகளில் அனிருத் பாடிய டன்டனக்கா பாடல் அப்படக்குழுவிற்கே பெரிய தலைவலியாக மாறியது.
இந்த பாடலில் டி.ராஜேந்தர் பற்றியும், அவரது பிரபலமான வசனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தன்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்து விதமாக இருப்பதாக கூறி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ரோமியோ ஜூலியட் படத்தை ஒரு வாரத்திற்குள் மனுதாரர் டி.ராஜேந்தருக்கு போட்டுக் காட்ட வேண்டும். அவர் படம் பார்க்கும்போது இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் உடன் இருக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் இருந்தால் அதுகுறித்து இரு தரப்பினரும் சமரசமாக பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
இதனை ஒரு அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக இரு தரப்பு வழக்கறிஞர்களும் கமிஷனர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அடுத்த விசாரணை வருகிற ஜூன் 4ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 comments:
Post a Comment