ஓவியாவின் இரண்டு புதிய தோழிகள்
சமீபத்தில் ஓவியா நடித்த யாமிருக்க பயமே, சண்டமாருதம் ஆகிய படங்கள் வெற்றி பெற்ற வெளியான நிலையில் அவர் தற்போது 'போகி' என்ற படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வருகிறார். த்ரிஷா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோர் மற்ற இரண்டு ஹீரோயின்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'போகி' படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து கூறும் ஓவியா 'இந்த படத்தில் தான் ஒரு டீச்சராக நடிப்பதாகவும், இந்த படத்தின் நடிக்க வாய்ப்பு கிடைத்ததன் மூலம் தனக்கு த்ரிஷா, பூனம் போன்ற நல்ல தோழிகள் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
'நாங்கள் மூவரும் படப்பிடிப்பின்போது கல்லூரி தோழிகள் போல நெருக்கமாக பழகிவிட்டோம். படப்பிடிப்பின்போது த்ரிஷா போன்ற சீனியர் நடிகையிடம் நிறைய கற்றுக்கொண்டேன்' என்றும் ஓவியா கூறியுள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் தமிழில் மிக அரிதாகவே வருகின்றது என்றும், அதில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக 'போகி' அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓவியா தற்போது மஞ்சப்பை' படத்தின் கன்னட ரீமேக்கில் லட்சுமி மேனன் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment