’மெட்ராஸ்’ படத்திற்கு நாகி ரெட்டி விருது

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சென்ற வருடத்தின் மிகசிறந்த பொழுதுப்போக்கு திரைப்படத்துக்கான விருதை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான "மெட்ராஸ்" திரைப்படத்தை தேர்ந்தேடுத்து விருது வழங்கப்ப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் கற்பக விநாயகம், சரோஜா தேவி, எஸ்.பி.முத்துராமன், டாக்டர்.ஆரூர் தாஸ், வெங்கட்ராம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
 
விருதை பெறுவதற்கு ஸ்டுடியோ க்ரீன் இணை தயாரிப்பாளர் திரு.எஸ்.ஆர்.பிரபு மற்றும் படக்குழுவினர் கலையரசன், ரித்விகா, இராமலிங்கன், முரளி, பிரவீன் சேர்ந்து விருதை பெற்றுக்கொண்டனர்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose