ஈ படத்திற்கு பிறகு ஜீவா, நயன்தாரா இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு திருநாள் என்று பெயர் வைத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பல கதைகளை கேட்டும் திருப்தியடையாத ஜீவாவை, இப்படத்தின் கதை வெகுவாக கவர்ந்ததால், உடனடியாக இப்படத்தின் படப்பிடிப்பை துவங்குமாறு இயக்குனரிடம் கூறியுள்ளார். மேலும், ‘தெனாவட்டு’ படத்திற்கு பிறகு, இப்படத்தில் கிராமத்து இளைஞனாக ஜீவா நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதையை கேட்டது தனது பிஸியான ஷெட்யூலை அட்ஜெஸ்ட் செய்து தேதிகளை வழங்கியுள்ளார்.
நகைச்சுவையும், காதலும், ஆக்ஷனும் சரிவிகிதத்தில் கலந்த இப்படத்தை PS.ராம்நாத் இயக்க உள்ளார். “திருநாள்” படத்தின் படப்பிடிப்பு மே மாதம் முதல் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது.
இதற்கென கும்பகோணத்தில் பிரம்மாண்டமான வகையில் செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை, திரு.எம்.செந்தில்குமார் அவர்கள் தொடங்கியுள்ள “கோதண்டபாணி பிலிம்ஸ்” எனும் புதிய நிறுவனம் தயாரிக்க உள்ளது.
0 comments:
Post a Comment