இரண்டாம் உலகம் தோல்வியில் மூழ்கி கிடந்த செல்வராகவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக இருக்கும் இந்தப் படத்தில் சிம்பு ஹீரோவாகவும், த்ரிஷா ஹீரோயினாகவும் நடிப்பதாக கூறப்பட்டது.
த்ரிஷா தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அலை விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவும், த்ரிஷாவும் இணையும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் துவங்க உள்ளதாம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளாராம். படத்தில் முக்கிய கேரக்டர்களில், டாப்ஸி மற்றும் லிங்கா படத்தில் நடித்த ஜெகதிபாபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷா - தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திருமணம் கூட ரத்தாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், த்ரிஷாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment