விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் இப்படத்தில் அட்டக்கத்தி புகழ் நந்திதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனினும் இந்த தகவல் படக்குழுவினரால் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நந்திதா, சமீபத்தில் தனது பிறந்த நாளின்போது இதனை உறுதிப்படுத்தி, இதுவரை இதுபற்றி வாய் திறக்காமல் இருந்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம்.
புலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கம்போடியா பகுதியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment