பிரபல தயாரிப்பாளரை ஏமாற்றிய விக்ரம் - பின்னணியில் விஜய் பட தயாரிப்பாளர்
ஐ என்ற மெகா பட்ஜெட் படம் வெளிவந்த பின்பும்விக்ரமுக்கு, நடிகர் விமலுக்கு தருகிற மரியாதையை கூட தருவதில்லை இளம் ரசிகர்களின் கூட்டம். இயக்குனர்கள் மற்றும் கதாநாயகிகள் பலத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது அவரது இன்றைய மார்க்கெட்.
அரிமாநம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், மீண்டும் தாணுவிடம் ஒரு கதை சொன்னாராம். அதற்கு தாணு, தம்பி இந்த கதை எனக்கு பிடிச்சுருக்கு. எந்த ஹீரோவா இருந்தாலும் கதை சொல்லுங்க. நான் படத்தை தயாரிக்கிறேன் என்றாராம்.
ஆனந்த் சங்கர், விக்ரமிடம் கதை சொல்ல, முதலில் தாணுவின் கலைப்புலி நிறுவனத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் விக்ரம். வேலைகளை மளமளவென்று ஆரம்பிக்கிற நேரம் பார்த்து, ஆனந்த் நான் ஒரு கம்பெனி சொல்றேன். நீங்க அந்த கம்பெனிக்கு படம் பண்ணுங்க என்றாராம் விக்ரம்.
ஆனந்த்-ம் உடனே கட்சி மாறி, விக்ரம் சொன்ன கம்பெனிக்கே படம் பண்ணுவதாக கூறிவிட்டாராம். இது தாணுவிற்கு தெரியவர, விக்ரம் போனது கூட பிரச்சனையில்ல. நல்ல கதையோட வந்த டைரக்டரையும் சேர்த்து தள்ளிக்கொண்டு போயிட்டாரே என்று கோபத்தில் உள்ளாராம்.
ஆனந்த் சங்கரின் மனசை கலைத்த அந்த கம்பெனி, கத்தி படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment