அக்‌ஷராவுக்கு அட்வைஸ் தரமாட்டேன்: ஸ்ருதி கறார்

அக்‌ஷராவுக்கு அட்வைஸ் தரமாட்டேன்: ஸ்ருதி கறார்
சமீபகாலமாக கமலின் படங்களுக்கு வம்பு வழக்கு தொடர் கதையாகிக்கொண்டிருக்கிறது. விஸ்வரூபம் படத்தையடுத்து அவர் நடித்த ‘உத்தமவில்லன்’ படத்தை தடை செய்ய கேட்டு கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சிக்கலிலிருந்து விடுபட்டு இன்று படம் ரிலீஸ் ஆகிறது. கமலைப்போலவே மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். கார்த்தி, நாகார்ஜுனா படத்திலிருந்து விலகியதால் அவர் மீது தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கோர்ட், போலீஸ், வழக்கு நீளும் என எதிர்பார்த்தபோது இந்த வழக்கிலிருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் சமரசம்பேசி சாமர்த்தியமாக வெளியில் வந்தார். 

‘பிரச்னைகளை சந்திக்கும் நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உங்கள் தங்கை அக்‌ஷராவுக்கு தரும் அட்வைஸ் என்ன?’ என்றதற்கு பதில் அளித்தார் ஸ்ருதி. ‘எனக்கு நேர்ந்த அனுபவம்போல் வேறு எந்த நடிகைக்கும் நேரக்கூடாது. இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனம் நிறைந்தவர்கள். அக்‌ஷராவுக்கு நான் தேவைப்பட மாட்டேன். ஆனாலும் அவருக்கு வழிகாட்டவும் பாதுகாக்கவும் அம்மா சரிகா உடன் இருக்கிறார்’ என்றார்.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose