ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படம் பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன், ஆண்ட்ரியா, பூஜா குமார், இயக்குனர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் முதலில் 2 மணி நேரம் 53 வினாடிகள் ஓடுவதாக இருந்தது. படம் ரொம்பவும் நீளமாக இருப்பதாக படக்குழுவினர் கருதியதால், தற்போது இந்த படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படம் முன்பைவிட விறுவிறுப்பாகவும், அனைவரும் ரசிக்கக் கூடியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment