இயக்குனர் ஷங்கர் இந்தியில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாருக்கானை வைத்து இயக்க இருப்பதாக பேசப்படுகிறது. இதற்காக தற்போது ஷங்கர் மும்பையில் சென்றிருக்கிறாராம்.
எந்தெந்தெந்த புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கிறது. அதை எந்திரன் 2வில் எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி ஷங்கர் தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம்.
ஷங்கர் மும்பையில் முகாமிட்டு எந்திரன் 2 பற்றி ஆலோசனை நடத்தி வருவது ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்திற்காக அல்ல, ரஜினி நடிக்கும் தமிழ் படத்திற்காக என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் ரஜினி நடிப்பதாக இருந்தால் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் தயாரித்தால் 200 கோடி பெரிய விஷயம் இல்லை. நாங்களே தயாரித்து, நாங்களே வெளியிட்டுக் கொள்வோம்.
நஷ்டமோ, லாப மோ எங்களை சேர்ந்தது. ரிலீசுக்கு பிறகு எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக் கொள்வோம் என்று அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்திருப்பதாக தெரிகிறது. அதனால் ரஜனி எந்திரன் 2வில் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.
எந்திரன் இரண்டாம் பகத்திற்கு நம்பர் ஒன் என்ற தலைப்பும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது. ஷங்கர் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்து விட்டதாகவும் ஜூலை மாதம் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றில் ஒரு மாதம் வரை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஒரு மாத படப்பிடிப்பு திருப்பதிகரமாக அமைந்தால் மட்டுமே படப்பிடிப்பை தொடரவும், படம் பற்றி முறையாக அறிவிக்கவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.
இதற்கிடையில் ராகவாலாரன்ஸ் சொன்ன ஒரு காமெடி கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ஒரு ஆக்ஷன் கதையும் ரஜினியின் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment