முன்னதாக ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. கால் ஷீட் பிரச்னையினால், தற்பொழுது தமன்னா கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.
இப்படம் ’தி இன்டச்சபிள்’ என்ற பிரஞ்சு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் பாதி மே இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கிடையில் கோகுல் இயக்கத்தில் ’கஸ்மோரா’ படத்திற்கான வேலையில் பிஸியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகர்ஜுனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,“ கார்த்திக்கும் வம்சிக்கும் ரொம்ப நன்றி! சந்தோஷத்தோட முதல் பாதி முடிவடைந்தது. மே இறுதியில் மீண்டும் சந்திப்போம்” என்று டிவிட் செய்துள்ளார்.
கோபி சுந்தர் இசையமைக்க, பிஎஸ் வினோத் ஒளிப்பதிவை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை செய்கிறார். படத்தினை பிவிபி சினிமாஸ் தயாரிக்கிறது.

0 comments:
Post a Comment