அவெஞ்சர்ஸ்ஸும் சென்னை வந்துட்டாங்க! புட் சட்னியின் புது வீடியோ!


அமெரிக்காவின் சூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸ்; தி ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் சென்னைக்கு வந்தால் எப்படி இருக்கும். இந்த கான்செப்ட்டை நகைச்சுவை கலந்த குறும்படமாக வெளியிட்டிருக்கிறது புட் சட்னி என்ற யூடியூப் க்ரூப்.
முன்னதாக சென்னையில் பேட் மேன் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மிரட்டல் பேட்மேன்னையே சென்னைக்கு கொண்டுவந்து பார்ப்பவர்களைக் குலுங்க குலுங்க சிரிக்க வைத்தனர். அதில் பேட்மேன், புருஷோதமன் வெங்கட் ராமன் என்ற பெயரிலும் அர்ஃப்ரட் கதாப்பாத்திரத்தில் டெல்லி கணேஷ் - அனந்த பத்மநாபன் என்ற பெயரிலும் நடித்திருப்பார். 

இரண்டாகவதாக புட் சட்னி க்ரூப்  வெளியிட்டிருக்கும் குறும்படமே “அவெஞ்சர்ஸ் இன் சவுத் இந்தியா?”. மனோபாலா தான் ஃப்யூரி / ஃப்யூரி ஜெகநாத். அவர்களிடம் பணிபுரியும் சூப்பர் ஹீரோக்களே அவெஞ்சர்ஸ். வேலையில்லாமல் தண்டச்சோறு சாப்பிட்டு வரும் அவெஞ்சர்ஸ்ஸை ஒன்று திரட்டி அவர்களுக்கு வேலை கொடுக்கிறார் ஃப்யூரி/மனோபாலா. ஆபத்துனு மக்கள் குப்பிட்டா போதும் உடனே வந்து இந்த ஹீரோஸ் உதவுவாங்க. அப்படி என்ன உதவுறாங்கனு வீடியோவைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க..
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose