கவர்ச்சி அழகிகளுடன் டி.ராஜேந்தர் ஆடும் குத்து நடனம்
'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கிய மீரா கதிரவன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் விழித்திரு. இந்த படத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, அபிநயா, தன்ஷிகா, தம்பி ராமையா, வெங்கட் பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் தெய்வத்திருமகள் படத்தில் நடித்ஹ்ட பேபி சாராவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். ஒரே ஒரு இரவில் நடக்கும் விதமாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு சத்யன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்திற்காக ஒரு குத்துப்பாடல் தயாரகி வருகிறது.
இந்த குத்துப்பாடலை எழுதி இசையமைத்து பாடியுள்ளார் டி.ராஜேந்தர். மேலும் இந்த பாடலுக்கு அவரே ஆடவும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். டி.ராஜேந்தருடன் இணைந்து பிரபல குத்தாட்ட கவர்ச்சி நடிகை சனாசூரி மற்றும் அஸ்மிதா ஆகியோர் ஆடவுள்ளனர்.
சிம்பு நடித்த வல்லவன் படத்தில் இடம்பெற்ற அம்மாடி, ஆத்தாடி உன்னை எனக்கு தறியாடி' என்ற பாடலுக்கு இணையாக இந்த குத்துப்பாடல் தயாராகி உள்ளதாகவும், இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment