ரஜினியின் அடுத்த படத்திற்கு ஹாரீஸ் இசையமைக்கின்றாரா?
ரஜினிகாந்த்-ஷங்கர் இணையும் எந்திரன் 2 திரைப்படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. வில்லன் வேடத்தில் அமீர்கான் மற்றும் கமல்ஹாசன் நடிக்க மறுத்ததை அடுத்து அந்த கேரக்டரில் விக்ரம் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
இந்திய திரையுலகிலேயே அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம், கத்தி' படத்தை தயாரித்த லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து இருவிதமான கருத்துக்கள் தற்போது கூறப்பட்டு வருகிறது. ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருப்பதால் ஷங்கரின் புதிய படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள கூறப்படுவது வெறும் வதந்தியே என்றும் ஷங்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\
இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் அப்போது இந்த படத்தில் பணிபுரியவுள்ள அனைவரும் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment