ஒ காதல் கண்மணி... மணிரத்னத்திற்கு அடித்த ஜாக்பாட்



மணிரத்னம் ராவணன், கடல் என தொடர்ந்து தோல்விப்படங்களை இயக்கியதால் அவுட் டேட்டட் டைரக்டர் என்று ரசிகர்கள் சொல்லும் நிலை உருவானது. இதை உணர்ந்தோ என்னவோ தனக்கு கை வந்த காதல் கதையை கையில் எடுத்தார்.

இவர் இயக்கிய ஓ காதல் கண்மணி  படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைத்தால் படத்தின் பட்ஜெட் எகிறிவிடும் என்பதால், மலையாளப் பட ஹீரோவான துல்கர் சல்மான், அவருக்கு ஜோடியாக நித்யா மேனனை நடிக்க வைத்தார்.

இதன் மூலம் படத்தின் பட்ஜெட்டில் பல கோடிகள் மிச்சமானது. படப்பிடிப்பு நாட்களையும் அதிகரிக்காமல் மிக குறைவான நாட்களில் படத்தை முடித்தார். ஓ காதல் கண்மணி படத்தைப் பொருத்தவரை பெரிய சம்பளம் ஏ.ஆர்.ரகுமானுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளதாம்.

மணிரத்னம் அதிகபட்சமாக 6 கோடிக்குள் படத்தின் பட்ஜெட்டை அடக்கிவிட்டாராம். இப்படத்தை சுமார் 20 கோடிக்கு பிசினஸ் செய்திருக்கிறார்களாம். தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெற்றது. இதுவரை ஓ காதல் கண்மணி  படம் தமிழகத்தில் மட்டும் 10 கோடிவரை வசூல் செய்திருக்கிறது. மொத்தத்தில் மணிரத்னத்துக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose