தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட த்ரிஷா - பின்னணியில் சிம்பு
நடிகை த்ரிஷாவுக்கும், வருண்மணினுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தின் போது வருண்மணியன் போட்ட வைர மோதிரத்தை த்ரிஷா கழற்றிவிட்டாராம். இதனால் த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் திருமணத்துக்கு முன்பே விவாகரத்து பெற்றதாக தகவல்கள் வெளியானது.
அது மட்டுமல்ல, த்ரிஷாவுக்கு வருண்மணியன் பரிசளித்த பல லட்சம் மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் த்ரிஷா திருப்பி அனுப்பி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதெல்லாம் எந்தளவுக்கு உண்மை என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருக்க உயிருக்குயிராக காதலித்த த்ரிஷா வருண்மணியன் காதலில் கல்லைப் போட்டது யார் என்ற கேள்வி தான் திரைத்துறையில் சுற்றி சுழன்றடிக்கிறது.
அந்தப் புண்ணியத்தை செய்த புண்ணியவான் யார் என்று விசாரித்தால் சிம்பு பக்கம் சந்தேகவிரலைத் திருப்புகிறார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் த்ரிஷா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே அலை மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் சிம்பு உடன் நடித்திருக்கிறார் த்ரிஷா.
இருவருக்கும் நீண்டகாலமாகவே ரகசிய கெமிஸ்ட்ரி இருந்து வருகிறது. இதெல்லாம் தெரிந்ததாலோ என்னவோ, தற்போது சிம்பு உடன் த்ரிஷா நடிப்பது வருண்மணியனுக்குப் பிடிக்கவில்லையாம்.
எனவே அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்று வருண்மணியன் த்ரிஷாவிடம் சொன்னதாகவும், அவரது பேச்சை மீறி சிம்புவுடன் நடிக்க த்ரிஷா ஆர்வம் காட்டியதோடு அட்வான்ஸும் வாங்கிவிட்டாராம்.
இந்த சம்பவம் தவிர வேறு சில சம்பவங்களும் வருண்மணியனை மனம் மாற வைத்ததாக சொல்கிறார்கள். வருண்மணியனின் மாற்றம் பற்றி த்ரிஷா, சிம்புவிடம் டிஸ்கஸ் பண்ணி இருக்கிறாராம்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment