45 கோடி இருந்தால் வாலு திரைப்படம் ரிலீசாகும்


நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் விஜய் சந்தர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் வாலு படத்தில் சிம்பு மற்றும் ஹன்சிகா நடித்துள்ளனர். சுமார் 3 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட வாலு படம் பல்வேறு காரணங்களினால் தாமதமாகி வந்தது. முக்கியமாக சிம்பு - ஹன்சிகா காதல் காரணமாக வாலு படத்தின் படப்பிடிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது.

படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் காத்திருக்க, கேரவனிலிருந்து சிம்பு ஹன்சிகா இறங்கி வரவே அரைநாளாகிவிடுமாம். இப்படியாக சிம்புவும் ஹன்சிகாவும் பல நாட்கள் படப்பிடிப்பில் நடந்து கொண்டதால் படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டது. பட்ஜெட் எகிறியதால் தயாரிப்பாளர் வாங்கிய கடன் தொகையும் பல மடங்கு அதிகமாகிவிட்டதாம். வாலு படத்துக்காக தயாரிப்பாளர் வாங்கிய கடன் தொகையும் வட்டியும் சுமார் 45 கோடி ரூபாயாம்.

சிம்பு நடித்த படத்துக்கு பிசினஸ் பத்து கோடிக்குள் தான் இருக்குமாம். இப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து ரூ.10 கோடி தேறினாலும், பாக்கி 35 கோடியை புரட்டி பைனான்ஸியருக்கு ரூ.45 கோடியை தயாரிப்பாளர் செட்டில் பண்ண வேண்டுமாம். அப்படி செட்டில் பண்ணினால் மட்டுமே வாலு படம் வரும் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகுமாம். தயாரிப்பாளர். இந்த இக்கட்டான நிலையில் வட்டியை தள்ளுபடி செய்யும்படி பைனான்ஸியரிடம் கேட்டிருக்கிறாராம். பைனான்சியர் மனம் மாறினால் வாலு படம் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆகும், என தகவல் வெளியாகியுள்ளது.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose