இளைய தளபதியை ஓரம்கட்டிய விஜய் டிவி - அதிர்ச்சி தகவல்கள் வெளியானது


கடந்த சில தினங்களுக்கு முன் விஜய் டிவியின் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் விஜய் டிவியின் மானம் கப்பலேறி உலகம் முழுவதும் சுற்றி திரிந்ததுதான் வேடிக்கை.

இந்நிகழ்ச்சியில் பல சொதப்பலான விஷயங்கள் நடந்தாலும் இதில் குறிப்பிடத்தக்க சில விஷயங்கள் உங்களுக்காக இந்த பதிவில் எழுதுகிறோம். பொதுவா விஜய் டிவி என்றால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நட்சத்திரங்களுக்கு மட்டுமே வருடா வருடம் விருது வழங்கிக் கொண்டிருக்கிறது என்பது இந்த வருடம் வெட்ட வெளிச்சத்து வந்துள்ளது.

பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு விதமான விருதுகள் வழங்கப்படுவது உண்டு இதில் இந்த வருடத்தில் மக்களுக்கு பிடித்த நடிகர் என்ற பிரிவில் விஜய் அல்லது அஜித் பெயர் தான் அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த விருதை தனுஷுக்கு கொடுத்தனர், அடுத்ததாக சிறந்த நடிகைக்கான விருதை பலரும் குக்கூ படத்தில் நடித்த மாளவிகா நாயருக்கு கொடுக்கப்படும் என எதிர்ப்பார்த்தனர் ஆனால் அந்த விருது அமலா பால்(வேலையில்லா பட்டதாரி)க்கு கொடுக்கப்பட்டது. இப்படி பல விருதுகள் எதன் அடிப்படையில் விஜய் டிவி நியமித்தது என்பதே விக்ரமாதித்தன் கதைக்கு விடை தெரியாதவன் போல முழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

ஆனால் ஜில்லா, கத்தி போன்ற இரண்டு படம் நடித்தும் ஒரு விருது கூட இல்லாததற்கு காரணம் விஜய் டிவியை கத்தி படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் பேசும் ஒரு வசனத்தால் கிழி கிழியென கிழித்திருப்பார் விஜய் அதுதான் இந்த புறக்கணிப்பு என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் ரசிகர்களும் கடும் கோபத்திலிருக்கிறார்கள் விஜய் டிவியின் மீது. இந்த முறை அஜித்திற்கு ஒரு விருது கூட இல்லை என்பதுதான் இந்த கோவத்திற்கு காரணமாம். மேலும் இசைஞானி இளையராஜாவுக்கான விருதை கடைசி வரை அவருக்கு தராமல் இழுத்தடிக்க விழாவின் பாதியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு யார் வர்றாங்களோ அவங்களுக்கு விருது நிச்சயம் என்று ஆஃபர் அடிக்கப்போகிறது விஜய் டிவி. அப்போ பவர் ஸ்டார் வருடா வருடம் பெஸ்ட் காமெடியன் அவார்ட் வாங்கிடுவார்.

முக்கிய குறிப்பு :- இந்நிகழ்ச்சிக்கு ரஜினி, விஜய், அஜித், சந்தானம் ஆகியோர் இந்த வருடம் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார்கள்.


    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose