வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரேம்ஜி, நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வரும் படம் மாஸ். இந்த படத்தில் வளர்ந்து வரும் காமெடியன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வில்லனாக நடித்து வந்த இவரை காமெடியனாக மாற்றி கல்லாவை நிரப்ப வைத்தது ராஜேஷ் என்றாலும் இன்று இவரது மார்கெட் டாப்பில் உள்ளது. அதனால் ஏகப்பட்ட படத்தில் நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன் கால்ஷீட் மாஸ் படத்திற்கு கிடைக்கவில்லை, வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட் இல்லாவிட்டால் தான் படபிடிப்பு நிறுத்தப்படும்.
ஆனால் இங்கு மொட்டை ராஜேந்திரன் கால்ஷீட் இல்லாத்தாதல் படபிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார் வெங்கட்பிரபு. தற்போது அவரது கால்ஷீட் கிடைக்க படத்தை திரும்ப ஆரம்பித்துவிட்டாராம் இவரும் சூர்யாவும் சண்டை போடும் காட்சிகள் படமாக்கபடவுள்ளன.
இறுதி கட்டத்தில் உள்ள மாஸ் படம் மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
0 comments:
Post a Comment