தமிழ், தெலுங்கு படத்தை தொடர்ந்து அஞ்சலி நடித்துள்ள கன்னட படம் ‘ரனவிக்ரமா' . இப்படத்தில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் மகன் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற ஒரு பாடல் உரிமை மீறி பயன்படுத்தப்பட்டிருப்பதாக லஹரி மியூசிக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு சிவராஜ் குமார் நடித்த ‘ரனரங்கா' படத்திற்காக தந்தை ராஜ்குமார் சொந்த குரலில் ஒரு பாடல் பாடி இருந்தார். அந்த பாடலின் வரிகள் தற்போது ‘ரனவிக்ரமா' படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதற்கான உரிமை எங்கள் நிறுவனத்திடம் உள்ளது. எனவே அந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என ஆடியோ நிறுவனம் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த இப்படத்துக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதுபற்றி பட தயாரிப்பாளர் ஜெயன்னா கூறும்போது,‘இப்பிரச்னை லஹரி நிறுவனத்துடன் பேசி தீர்க்கப்படும். ராஜ்குமார் பாடிய முழுபாடலையும் ‘ரனவிக்ரமா‘ படத்தில் பயன்படுத்தவில்லை. ஜகவே ஆண்டு ரனரங்கா என்ற 3 வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம். மேலும் இப்பாடலின் இசை அமைப்பாளர், மெட்டு எல்லாமே புதியது' என்றார்..
0 comments:
Post a Comment