கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. ‘ஷமிதாப்' இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். ஸ்ருதி ஹாசன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்த நிலையில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தார் அக்ஷரா. ஷமிதாப் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதுவரை தனது உடை மற்றும் தோற்றத்தில் அதிக கவனம் அக்கறை காட்டாமல் இருந்த அவரைச் சுற்றி டயட்டீஷியன், உடற்பயிற்சி வல்லுனர்கள், சிகை அலங்கார நிபுணர்கள், அழகு நிபுணர்கள் என பலர் வட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாலிவுட் இண்டஸ்ட்டிரியின் தேவைக்கு ஏற்ப ஃபிகரையே மாற்றிக்காட்டுவதாக அவர்கள் அக்ஷராவுக்கு உறுதி கூறி உள்ளனர். அக்ஷராவும் தனது தோற்றத்தை கவர்ச்சியாக மாற்றுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடந்த அழகு ஆடை அணிவகுப்பில் பங்கேற்றார். விதவிதமான உடைகள் அணிந்து பிரபலமான மாடல்களுடன் ஸ்டைலாக பூனை நடை நடந்து அசத்தினார். இது பற்றி அக்ஷரா கூறும்போது, ‘ஒரு நடிகையாக உடை மற்றும் தோற்றத்தில் எவ்வளவு அக்கறை காட்ட வேண்டும் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். அதுபற்றிய அனைத்து விஷயங்களையும் அம்மா சரிகாவிடம் ஆலோசிப்பேன். புதுவகை டிசைன்களை எனது ஆடை விஷயத்தில் பின்பற்ற உள்ளேன்' என்றார்.
0 comments:
Post a Comment