ஐஸ்வர்யாராய் ரீ-எண்ட்ரி படத்தின் ரிலீஸ் தேதி
ஐந்து வருடங்களுக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆகியுள்ள முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நடித்து வரும் 'ஜாஸ்பா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படத்தின் இயக்குனர் சஞ்சய் குப்தா தனது அதிகாரபூர்வமான சமூக இணையதளத்தில் இன்று அறிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி 'ஜாஸ்பா' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்றும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருவதாகவும் சஞ்சய் குப்தா இன்று அறிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் உடன் இர்பான்கான், சபனா ஆஸ்மி, அபிமன்யூ சிங், அதுல் குல்கரினி மற்றும் அனுபம்கெர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கமலேஷ் பாண்டே மற்றும் ராபின் பட் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படத்தை எசல் விஷல் புரடொக்ஷன்ஸ் பிரைவைட் லிமிடெட் (Essel Vision Productions Pvt Ltd) என்ற நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றது.
Labels:
aiswaryarai,
cinema,
cinema.tamil
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment