உதயநிதிக்கு மீண்டும் கிடைத்த 'கெத்து'
உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நண்பேண்டா' திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அவர் தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளார்.
மான் கராத்தே' இயக்குனர் திருக்குமரன் உதயநிதியின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு 'கெத்து' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பிரபல ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் இந்த டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்திருந்த காரணத்தால் உதயநிதி நடிக்கும் படத்தின் டைட்டில் மாற்றப்படும் என செய்திகள் வெளிவந்தன.
ஆனால் உதயநிதி-கோபி அமர்நாத் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உதயநிதிக்கு கோபி அமர்நாத் தனது டைட்டிலை விட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவ்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் உதயநிதி-திருக்குமரன் இணையும் படத்திற்கு 'கெத்து' டைட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக 'ஐ' நாயகி எமிஜாக்சன் நடிக்கவுள்ளார். காமெடி வேடத்தில் கருணாகரன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் தொடங்கவுள்ளது. உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கும் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
amy jaksan,
cinema,
cinema.tamil,
uthayanithy
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment