இன்று முதல் தனுஷின் 'விசாரணை' ஆரம்பம்
தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணி தயாரிப்பில் உருவான 'காக்கா முட்டை' இரண்டு தேசிய விருதுகளை பெற்ற சந்தோஷத்தில் இதே கூட்டணியில் தயாராகி வரும் 'விசாரணை' படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனுஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறும்போது, 'எங்கள் இருவருக்கும் பெருமை தேடி தந்த காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டனுக்கும் இந்த படத்தில் நடித்த தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரங்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் எங்களது அடுத்த தயாரிப்பான 'விசாரணை' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், கயல் ஆனந்தி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிஷோர் படத்தொகுப்பாளராகவும், ராமலிங்கம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிகின்றார்.
Labels:
cinema,
cinema.tamil,
dhanush
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment