அதற்கு தற்போது நமது விகடனுக்கு வெங்கட் பிரபு கொடுத்த பேட்டியில் பதில் கூறியுள்ளார். அவர் கூறுகையில், 'மாஸ்’க்கு யுவன்தான் இசை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். யுவனை மாத்திட்டதா வந்த தகவல் ஒரு வதந்தி. 'யுவன்கூட ஒரு பாட்டாவது வொர்க் பண்ணணும்ணா. கேட்டுச் சொல்லுங்க’னு தமன் அடிக்கடி கேட்பான்.
அதாவது யுவன் டியூனுக்கு இசைக் கலைஞர்களை வெச்சு இசைக்கோர்ப்பு பண்ணணும்னு விரும்பினான். 'சரோஜா’வில்கூட யுவனோட இரண்டு டியூன்களுக்கு பிரேம்ஜிதான் இசைக்கோர்ப்பு.
'பிரியாணி’யில் யுவன், இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன்னு ஐந்து இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடின பாட்டு கம்போஸ் பண்ணும்போது தமன் தன் விருப்பத்தை யுவன்கிட்ட சொல்லியிருக்கான்.
யுவனும் அதுக்கு ஓ.கே சொல்ல... அப்படித்தான் தமன் இதுல ஒரு பாட்டுக்கு இசைக்கோர்ப்பு பண்ணினான். அது வேறமாதிரி வதந்தியாயிடுச்சு. எனி வே... அந்த ஃப்ரீ பப்ளிசிட்டிக்கும் நன்றி.''
0 comments:
Post a Comment