கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ஆகிய படங்களை எதார்த்தமான கதையுடன் இயக்கிய சீனு ராமசாமி தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'இடம் பொருள் ஏவல்' என்ற படத்டை இயக்கி வருகிறார்.
ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த சரண்யாவுக்கு சிறந்த நடிகை விருதும், இந்த படத்திற்கு பாடல் எழுதியதற்காக வைரமுத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று சீனு ராமசாமிக்கு மதுரையில் 'மக்கள் இயக்குனர்' என்ற பட்டம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
125 வருடங்கள் பாரம்பரிய மிக்க மதுரைக்கல்லூரி நேற்று மாலை நடத்திய ஒரு விழாவில் இந்த விருதை இயக்குனர் சீனு ராமசாமிக்கு வழங்கியது. சீனு ராமசாமிக்கு இந்த விருதை மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.முரளி மற்றும் பேராசிரியர் ந.ரத்தினக்குமார் ஆகியோர்கள் வழங்கினர்.
விருதை பெற்றவுடன் இந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய இயக்குனர் சீனு ராமசாமி, ' "வாழும் காலத்தில் இதுபோன்ற பட்டப்பெயர்கள் மற்றும் அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விததில் மக்கள் தரும் பட்டப்பெயர்களே என்றும் நிரந்தரமானவை. இருப்பினும் மதுரையில
0 comments:
Post a Comment