எம்.மருதுபாண்டியன் இயக்கி தயாரிக்கும் படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
விரைவில் வெளிவர உள்ள இப்படம் உதவி இயக்குநர்களின் வாழ்க்கையை நெகிழ்ச்சியுடன் சித்தரிக்கும் படம். இப்படத்தில் உதவி இயக்குநர் வேடத்தில் நடிக்கிறார் பாபி சிம்ஹா. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
படத்தின் கதைப்படி ஒரு சின்ன அறையில் பாபி சிம்ஹா தங்கியிருப்பதாக கதை நகர்கிறது.
இந்தக்காட்சியை சென்னையில் உள்ள நெசப்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு அறையில் படமாக்கி இருக்கிறார் எம்.மருதுபாண்டியன். சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் அந்த அறைக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருக்கிறது.
யெஸ்... ஒருகாலத்தில் விஜய் சேதுபதியும், அட்டக்கத்தி தினேஷும் குடியிருந்த அறை அது. இந்த அறையைப் பற்றி கேள்விப்பட்டு இந்த அறைதான் வேண்டும் என்று தேடிப்பிடித்து அங்குபோய் படமாக்கினாராம் மருதுபாண்டியன்.
அந்த அறையில் தங்கியிருந்த விஜய் சேதுபதியும், அட்டக்கத்தி தினேஷும் இன்று சினிமாவில் பெரிய இடத்திலிருக்கிறார்கள். அந்த அறையில் தங்கியதைப்போல நடித்த பாபி சிம்ஹாவும் தேசியவிருது வாங்கிவிட்ட பெரிய நட்சத்திரமாகிவிட்டார்.
எல்லாவற்றையும் தாண்டி அந்த அறையே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்திருக்கிறது.
அட அப்படியா...! விஜய்சேதுபதி, அட்டகத்தி தினேஷ் அறையில் வசிக்கும் பாபி சிம்ஹா
Labels:
cinema,
cinema.tamil,
vijaysethupathy
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment