”ஒவ்வொரு வீட்டுக்கதவையும் தட்டி எனது கடந்த காலத்தை அழித்து விடுங்கள் என கூற முடியாது” சன்னி லியோன் ஆவேசம்
புதுடெல்லி
கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
சன்னி லியோன் நடிப்பில் இந்திப்படம் ’ஏக் பஹேலி லீலா’ டிரைலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. ’ஏக் பஹேலி லீலா’ஏப்ரல் 10 ந்தேதி வெளிகிறது. இந்த படத்தை பாபி கான் இயக்கி உள்ளார் இது ஒரு மறுபிறவி குறித்த படம் ஆகும் இசை மற்றும் திர்ல்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஜெய்மனுஷாலி, ராஜ்னேஷ் டக்கல் மற்றும் மோகித் அக்லாவாத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இத படத்தில் கதைப்படி சன்னி லியோன் ரஜினியின் தீவிர ரசிகர். சூப்பர் ஸ்டார் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்று உள்ளது. இந்த பாடல் காட்சியில் கண்ணாடியை துடைத்து மாட்டும் ரஜினியின் ஸ்டைலை அப்படியே காப்பி செய்துள்ளார். தயாரிப்பாளரும் அந்தப் பாடலின் நடன அமைப்பாளருமான அக்மத் கான் சன்னி லியோனுக்கு இந்தக் காட்சியை விளக்கித்தர, முப்பது நிமிடங்கள் பயிற்சி செய்து, ரஜினி போலவே ஸ்டைலாக கண்ணாடியை மாட்டியிருக்கிறார் சன்னி லியோன்.
இது குறித்து படத்தின் இயக்குனர் பாபி கான் கூறியதாவது:-
முதலில் இந்த படத்தில் நடிக்க பல பெரிய நடிகர்கள் மற்றும் தெரிந்த பலர் என்னை அணுகினர். ஆனால் இந்த ஆபாச படத்துறையில் இருந்து வந்து நடிக்கை சனி லியோன் இருப்பாதால் அவருடன் நடிக்க மறுத்து விட்டனர். அவருடன் நடிப்பத்தற்பு பல நடிகர்கள் மறுப்பு தெரிவித்தது என்னை மிகவும் வருத்தமடைய செய்தது.
அது அவர் தேர்ந்து எடுத்த அவருடைய கடந்த கால வாழ்க்கை ஆனால் இந்தியாவில் மக்களின் சிந்தனை அப்படியே உள்ளது.பல நடிகர்கள் அவருடன் நடிப்பதை தவிர்த்தார்கள்.
இதில் சன்னி மிகவும் வருத்தமடைந்தார். சன்னியின் கனவர் டெனியல் வெபர் என்னிடம் கூறினார் அடுத்த முறை நீங்கள் நடிகர்களை பார்க்க செல்லும் போது உங்களுடன் நானும் வருகிறேன். நான் அவர்களிடம் கூறுகிறேன் தயவு செய்து என்னுடைய மனைவியுடன் பணி புரியுங்கள் எனது மனைவி தொழில் முறை நடிகையாவார் என கூறுகிறேன். என கூறி வருத்தப்பட்டார்.என்று கூறினார்.
இது குறித்து சன்னி லியோன் கூறியதாவது:-
மக்கள் அவர்கள் என்னை எவ்வாறு விரும்புகிறார்கள் என்பதை முடிவெடுக்கலாம்.நான் அப்படி என்ன இருக்கிறேன் நான் ஏன் என்னை மாற்றி கொள்ள வேண்டும்.இதற்கு முன்னால் நான் அப்படி என்ன செய்து விட்டேன். நான் ஒவ்வொருவரின் வீட்டுக்கதவையும் தட்டி எனது கடந்த காலத்தை அழித்து விடுங்கள் என கூற முடியாது.அதற்காக நான் மன்னிப்பு கோரும் வகையில் நான் இல்லை. அல்லது எனது கடந்த காலம் மோசமானதாக போய்விடும். நான் என்ன செய்து விட்டேன்.அது குறித்து எனக்கு வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
ஒவ்வொருவரின் வீட்டுக்கதவையும் தட்டி எனது கடந்த காலத்தை அழித்து விடுங்கள் என கூற முடியாது....
Labels:
cinema,
cinema.tamil,
sunny liyone
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment