ஒரு தெய்வம் தந்த பூவே, சஹானா, கிளிமாஞ்சாரோ உள்பட ஏராளமான பாடல்கள் பாடி இருப்பதுடன், நயன்தாரா, தமன்னா, சமந்தா, சமீரா ரெட்டி போன்ற நடிகைகளுக்கு பல படங்களில் டப்பிங்கும் பேசி இருப்பவர் சின்மயி. அவர் கூறியது:நான் எப்போதுமே சுதந்திரமாக பேசுவதற்கு ஆதரவு தருவேன். அதேசமயம் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் அவதூறு பரபரப்புபவர்களும் ஆபத்தானவர்கள் என்பதை சட்டம் உருவாக்குபவர்களும், மக்களும் உணர வேண்டும். மனதளவில் நான் உறுதியாக இல்லாமல் இருந்திருந்தாலோ, எனது அம்மா மற்றும் நலவிரும்பிகளும் ஆதரவுகாட்டாமல் இருந்திருந்தால் டுவிட்டரில் என்னைப்பற்றி சிலர் தவறாக சித்தரித்திருந்ததை கண்டு நான் தற்கொலை செய்திருப்பேன். ஒருசிலர் திடீரென்று பிரபலமாக வேண்டும் என்பதற்காக யாரையாவதுபற்றி தவறாக சொல்லும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை மற்றவர்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களும், பண்பாடு மிக்க தமிழர்களும் டுவிட்டரை பார்த்துக்கொண்டு மட்டும்தான் இருப்பார்கள். நாம் சட்ட உதவியை நாட வேண்டும்.
0 comments:
Post a Comment