உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. தோல்விக்கு இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியே காரணம் என்றும் அவர் ஒரு ரன்னில் அவுட் ஆனதலாயே இந்திய கடும் நெருக்கடிக்குள்ளானது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
போட்டியை காண அவரது காதலி அனுஷ்கா சர்மா சிட்னி சென்றதால்தான் விராட் கோலி சரியாக ஆடாததற்கு காரணம் தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன.ட்விட்டர் தளத்தில் அனுஷ்கா சர்மா கண்டபடி விமர்சனத்திற்குள்ளானார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி,''இது ரசிகர்களின் முதிர்ச்சியற்ற மனநிலையையே காட்டுகிறது. ட்விட்டர் போன்ற தளத்தில் அனுஷ்கா சர்மாவை கண்டபடி விமர்சித்து வருகின்றனர். இது நியாயமற்ற செயல். அனுஷ்கா சர்மா அப்படி என்ன தவறு செய்து விட்டார்? எல்லா கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினரையும் போலத்தான் அவரும் இந்த போட்டியை காண விரும்பியுள்ளார். தனது விருப்பத்திற்குறிய ஒருவர் இது போன்ற முக்கியமான ஆட்டத்தில் விளையடும் போது மற்றவர் அதனை பார்க்க விரும்புவதில் எந்த தவறும் இல்லை'' என்றார்.
0 comments:
Post a Comment