’குட்டிபுலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி , லட்சுமி மேனன் , ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் தம்பி ராமையா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள படம் ‘கொம்பன்’.மேலும் படிக்க ...
கிராமத்து மாமன் , மருமகன் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம். ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என அனைத்தும் வெளியாகி படத்தின் ரிலீஸ் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது,
’கொம்பன்’ படம் முதுகுளத்தூர் கலவர சம்பவத்தை பின்னனியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தியாகி பேரையூர் வேலுச்சாமி நாடாரை கலங்கப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிகிறது. படத்தின் பெயரான ‘கொம்பன்’ என்ற தலைப்பே சண்டையைத் துண்டுவதாக இருக்கிறது . கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்த படம் வெளியானால் மேலும் இந்த கலவரங்கள் அதிகரிக்கும். என கூறி படத்திற்கு தடை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்துள்ளார் தமிழ் நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்.
0 comments:
Post a Comment