'கோலி சோடா' வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் விஜய் மில்டன் இயக்கி வரும் திரைப்படம் '10 எண்றதுக்குள்ள'. விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய்யின் கத்தி உள்பட பல படங்களில் நடித்த சமந்தா முதன்முதலாக விக்ரமுக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை சமந்தா, 'இதுவரை நான் ஏற்று நடித்த கேரக்டர்களிலேயே மிகவும் கஷ்டமான கேரக்டர் இதுதான்' என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மில்டனின் கோலி சோடா' ரிலீஸானபோது அந்த படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பாராட்டிய சமந்தா, அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையில் நடைபெறும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட இந்த படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு தற்போது நேபாளத்தில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் ஸ்ரேயா ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் மே மாதத்தின் இறுதி வாரத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment