தனது முந்தைய படங்களைப் போல் இல்லாமல், முதன்முறையாக மாஸ் படத்தில் கதை சொல்ல முயற்சி செய்திருப்பதாக அப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ஜெய், சிவா உள்ளிட்டோர் நடித்த சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கங்கை அமரனின் மகனும், நடிகருமான வெங்கட் பிரபு. இவர் தற்போது சூர்யா, நயன்தாரா நடிப்பில் மாஸ் படத்தை இயக்கி வருகிறார். இது தான் மாஸ் படத்தின் கதை என ஏகத்துக்கும் இணையத்தில் கதைகள் உலாவி வருகின்றன. இந்நிலையில், தனது மாஸ் பட அனுபவம் குறித்து வார இதழுக்கு வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த ஸ்கிரிப்டை சூர்யா பண்ணக் காரணமே இதோட ஒன்லைன் தான். இதை இண்ட்ரஸ்டிங்கான ஸ்கிரீன்பிளேவா பண்ணியிருக்கோம்.
ஹாரர, த்ரில்லரானு சின்ன லீடு கொடுத்தாலே நம்ம ரசிகர்கள் அதுக்குள்ள புகுந்து பெரிய வீடே கட்டிடுவாங்க. முதல் ஷோ வரைக்குமாவது படத்துக்கான எதிர்பார்ப்பை தக்க வைக்க வேண்டியிருக்கு.
இதுவரை நான் பண்ணின படங்கள், காட்சிகளின் தொகுப்பாத் தான் இருக்கும். ஆனால், மாஸ் படத்துல முதன்முறையா கதை சொல்ல முயற்சி பண்ணி இருக்கேன்.
‘இந்த உலகத்துல ஏமாத்துனா தான் பிழைக்க முடியும், வெற்றிகரமா வாழ முடியும். பணம் தான் பிரதானம்னு நினைக்கிற ஒருத்தன், அவனைக் காலி பண்ணத் துடிக்கிற இன்னொருத்தன். அவங்களைச் சுத்தி நடக்கிறது தான் மாஸ்.
பொழுதுபோக்கு, பணத்துக்காகத் தான் சினிமா பண்றோம். மாஸ்ல அதையும் தாண்டி ஒரு கதை சொல்லல் இருக்கும்.
கண்டிப்பா இது சம்மர் ட்ரீட். இதில் சூர்யாவின் கேரக்டர் பேர் தான் மாஸ்.
எனக்கு ஒரு ஆசை உண்டு. ‘தல'ன்னா அஜீத் சார், ‘தளபதி'ன்னா விஜய் சார்னு அவங்களோட ரசிகர்கள் அடையாளப் படுத்துற மாதிரி, ‘மாஸ்'னா சூர்யானு ரசிகர்களால் அடையாளப்படணும்' என இவ்வாறு தனது ஆசையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment