நெட்டி முறித்து திருஷ்டி சுற்றி போடலாம். அந்தளவுக்கு வெற்றியை தொட்டுக் கொண்டிருக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ். தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் நட்சத்திரங்களெல்லாம் வியக்கும் ஒளிப்பதிவாளர் என்பதை விட, சதுரங்க வேட்டை ஹீரோ என்றால் சட்டென்று புரிந்து கொள்வார்கள் தமிழ்சினிமா ரசிகர்கள். அந்த படத்திற்கு அப்புறமும் கூட அவரை சந்திக்கும் இயக்குனர்கள் தலையணை சைஸ் ஸ்கிரிப்டுடன் வருகிறார்கள். எல்லாமே போக்கிரி, மொள்ளமாரி, முடிச்சவிக்கி சப்ஜெக்டுகள்தான்.
அதென்னவோ தெரியலன்னு சொல்ல மாட்டேன். அந்த மாதிரி சப்ஜெக்டுக்கு இந்த நட்டி பொறுந்திட்டான்னு நினைக்கிறேன். இருந்தாலும் கெட்ட பயலா நடிக்கறதே ஒரு சுகம்தான் என்று சிரிக்கும் நட்டி, ரொம்ப வித்தியாசமாக நடித்த படம் கதம் கதம். அங்கேயும் இவர் கெட்ட போலீஸ்தான். படத்தில் கெட்டவராக இருந்தாலும், நிஜத்தில் வல்லவராக இருக்கிறார் நட்ராஜ். எப்படி? இல்லையென்றால் விஜய்யே அழைத்து இந்த படத்தை நீங்கதான் ஒளிப்பதிவு செய்யணும் என்று சொல்வாரா?
திடீரென்று ஒரு நாள் இவரை அழைத்த விஜய், ‘சார்… நீங்கதான் நான் நடிக்கும் புலியை ஒளிப்பதிவு செய்யணும்’ என்றாராம். உடனே சரி என்று கூறிவிட்டார் இவர். ஏற்கனவே யூத் என்ற படத்தில் விஜய்யை பிரைட்டாக காண்பித்தவர்தான் நட்டி. இன்னைக்கு ஒளிப்பதிவு சாதனங்கள் ஏராளமா வந்துருச்சு. இன்னும் இன்னும் என்னோட திறமை என்னன்னு காட்றதுக்கு விஜய் சாரோட அழைப்பு பெரிய வாய்ப்பு என்றார். நானும் அப்ப யூத் டைமிலிருந்து பார்க்கிறேன். எப்பவும் அன்பா, பணிவா இருக்கறதுல அவரை விட்டா ஆளேது என்று ஒரே விஜய் புராணம் பாடும் நட்ராஜ், புலி படத்தில் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லையாம். ஏன்? நான் ஒளிப்பதிவு பண்ணுற படத்தில் நான் நடிக்கறதில்ல என்பதை கொள்கையாவே வச்சுருக்கேன். அதனால்தான் என்றார்.
ஷுட்டிங்குக்கு நடுவில் ஒரு நாள் இவரை அழைத்த விஜய், சார்… நீங்க ஹீரோவா நடிச்சுருக்கிற கதம் கதம் வந்திருக்கு போல. கொஞ்சம் க்யூப் கீவேர்ட் சொல்லுங்க. நான் வீட்ல பார்த்துக்குறேன் என்றாராம்.
அவரு ஷுட்டிங்ல நடிக்கிற நேரம் போக, நான் என்ன பண்றேன்னு கூட விசாரித்து வச்சுருக்கார். ஐ ஆம் ஹேப்பி என்று தோள்குலுக்கும் நட்டியிடம் அப்படியே ரஜினியின் சாயல்.
0 comments:
Post a Comment