என்னால் சும்மா இருக்க முடியாது: கமல் ஹாஸன்
எனக்கு இடையூறுகள் அளித்தாலும் என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. நான் தொடர்ந்து நடிப்பேன் என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.
தன்னையே சிலர் குறிவைப்பதாக உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். சண்டியர் என கமல் தனது படத்திற்கு தலைப்பை தேர்வு செய்து பிரச்சனையில் சிக்கினார். அதையடுத்து கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், விஸ்வரூபம் ஆகிய படங்களும் பிரச்சனையை சந்தித்தன.
அதிலும் விஸ்வரூபம் படத்தை வெளியிட கமல் ஹாஸன் படாதபாடு பட்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கூறும் அளவுக்கு அவருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை நினைத்து முடங்கிவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து கமல் கூறுகையில்,
நாந் நடித்துள்ள பாபநாசம் மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனாலும் சரி அல்லது தாமதமானாலும் சரி நான் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருப்பேன். என்னால் சும்மா உட்கார முடியாது. ரசிகர்களுக்கு நல்ல படங்களை அளிக்க விரும்புகிறேன். அவர்களும் அதைத் தான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்கக் கூடாது, அதை தடுக்கவும் முடியாது என்றார்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment