தோனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் இவரது முகத்தை தமிழ் ரசிகர்களின் மனதில் நன்கு பதிய வைத்தது. தற்போது இந்தியில் கைவசம் ஏழு படங்களை வைத்துள்ள பிஸியான ஹீரோயின் தான் ராதிகா ஆப்தே. மலையாளத்தில் பஹத் பாசில் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்து சமீபத்தில் வெளியான 'ஹரம்' படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ராம்கோபால் வர்மாவின் 'ரத்த சரித்திரம்' மூலம் தெலுங்கில் நுழைந்த ராதிகா ஆப்தே, அடுத்து நடித்தது பாலகிருஷ்ணாவின் 'லெஜன்ட்'.. மீண்டும் தெலுங்கில் நடித்துக்கொண்டிருப்பதும் பாலகிருஷ்ணாவின் 'லயன்' படத்தின் மூலமாகத்தான். ஆனால் தெலுங்கு திரையுலகம் நடிகைகளுக்கு மரியாதையை தரவில்லை என கொந்தளிக்கிறார் ராதிகா..
“தெலுங்கு சினிமா ஆணாதிக்கம் கொண்டவர்களின் பிடியில் சிக்கியுள்ளது. என்னால் இங்கே நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும் என தோன்றவில்லை” என கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார் ராதிகா ஆப்தே. ஆணாதிக்கம் பிடித்தவர்கள் என்று, இவருக்கு இரண்டு படங்களில் வாய்ப்பு கொடுத்த பாலகிருஷ்ணாவை சொல்கிறாரா..? இல்லை வாய்ப்பு தராதவர்களை, தன்னை டம்மியாக்க நினைப்பவர்களை சொல்கிறாரா என்றுதான் தெரியவில்லை.
0 comments:
Post a Comment