உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்தியா அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் செம அடிவாங்கி நாடு திரும்பியது. அதுவரை செஞ்சுரியாக அடித்து தள்ளிய விராட்கோஹ்லி அரையிறுதியை காண அனுஷ்கா சர்மா வந்த குஷியில் மைதானத்துக்கு போன வேகத்தில் திரும்பி வந்தார்.
கிரிக்கெட் ரசிகர்கள் அனுஷ்கா சர்மா மீது செம காண்டில் இருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 8ந் தேதி முதல் 24ந் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதன் துவக்க விழா வருகிற 7ந் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் அனுஷ்கா சர்மா ஆட சம்மதித்திருக்கிறார். தன் மீது கோபத்தில் இருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்த அவர் ஆட சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் மேலும் சில இந்தி நட்சத்திரங்களும் நடனம் ஆட இருக்கிறார்கள்.
- Blogger Comment
- Facebook Comment
0 comments:
Post a Comment