சமீபகாலமாக சூப்பரையும், அவரது குடும்பத்தாரையும் பிரச்சினை துரத்தி துரத்தி அடித்து வருகிறது. இதனால் நடிகர் ரொம்பவே வேதனையில் உள்ளாராம்.
முதலில் பொம்மைப்படத்திற்கு பிரச்சினை வந்தது, கஷ்டப்பட்டு நடிகர் தனது மகளைக் காப்பாற்றினார். பின்னர் திரையில் அணை கட்டியவரை மீண்டும் துரத்தியது பிரச்சினை. தலைக்கு மேல் வெள்ளம் போவதை உணர்ந்து, உரியவர்களை அழைத்து பிரச்சினையை சுமூகமாக முடித்தார்.
ஒரு வழியாக பிரச்சினைகள் முடிந்தது என நடிகர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்னதாக, மனைவிக்கு வந்தது பிரச்சினை. தொடர் பிரச்சினைகளால் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர். எனவே, விரைவில் நிம்மதி தேடி இமயமலைக்கு ஒரு பயணம் சென்று வரும் முடிவில் இருக்கிறாராம்.
0 comments:
Post a Comment