சிம்புவை சிபாரிசு செய்த அனிருத்



சிம்பு நடித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டே போகின்றன. அதைப் பற்றி அவர் அலட்டிக்கொள்வதே இல்லை. அடுத்தடுத்து புதிய படங்களை கமிட் பண்ணியபடி பணத்தை அள்ளிக்கொண்டிருக்கிறார். வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என சிம்பு நடித்த படங்கள் க்யூவில் காத்திருக்கின்றன. இவை தவிர செல்வராகவன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார் சிம்பு. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

இந்நிலையில் ‘வணக்கம் சென்னை’ படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி அடுத்து இயக்கும் படத்தில் சிம்புவை ஹீரோவாக கமிட் பண்ணி இருக்கிறார். கைவசம் உள்ள படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம் சிம்பு! கிருத்திகா உதயநிதி இயக்கிய ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு இசை அமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசை அமைக்கிறார்! தன்னுடைய கதையை அனிருத்திடம் கிருத்திகா சொன்னபோது, கதையைக் கேட்ட அனிருத், தன் நண்பரான சிம்புவை சஜஸ்ட் செய்திருக்கிறார். அதன் பிறகே தன் படத்துக்கு சிம்புவை கமிட் பண்ணினாராம் கிருத்திகா. அனிருத் சிபாரிசு செய்தார் என்பதற்காக சேட்டையைக் காட்டாமல் இருப்பாரா சிம்பு?"
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

 
Copyright © 2013. சினிமா செய்திகள் - All Rights Reserved
Template Created by ThemeXpose